
பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிதுள்ளார்.
இதேவேளை, உயர்தர விடைத்தாள் பரீட்சைக்கு இன்னும் சுமார் 4,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உயர்தர விடைத்தாள்கள் பரீட்சை தாமதமாவதால் ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை உள்ளடக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.