
வவுனியா குட்ஷெட் தெருவில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (07) காலை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்தோடு, உயிரிழந்த தந்தைக்கு 41 வயதும், தாயாருக்கு 36 வயதும், சிறுமிகள் இருவரும் 3 வயது மற்றும் 9 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சிறுமிகளின் சடலங்கள் நாற்காலியிலும் தாயின் சடலம் அறையொன்றிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.