
தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஆணைக்குழுவில் ஆஜராகாதமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், ஆணைக்குழுவில் ஆஜராகாதமை மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று (07) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பாகக் கேட்டதற்கு, நிதியமைச்சின் செயலாளர் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.