
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் இன்று (10) வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.
மேலும், பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 81.12 டொலர்களாக பதிவாகியுள்ள நிலையில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.13 டொலர்களாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 04 நாட்களுக்கு முன்னர் 86.26 டொலர்களாக பதிவாகியிருந்ததோடு WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 04 நாட்களுக்கு முன்பு $80.46 ஆக காணப்பட்டது.