
நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உண்மைகளை விளக்கினார்.
இதேவேளை, சமூக ஊடகங்களில் சிறுமி தாக்கப்படும் காணொளி தொடர்பில் அவரது மாற்றாந்தாய் எனக் கூறிக்கொள்ளும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டில் உள்ள குழந்தையின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒன்றரை வயதுடைய குழந்தையை கொடூரமாக தாக்கி, அதை வீடியோ எடுத்து தனது எஜமானியான சிறுமியின் தாயாரிடம் காட்டி, அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.