
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தாய்லாந்து செல்வதற்காக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் விதிக்கப்பட்ட விமானத் தடை காரணமாக அவர் நாடு திரும்பியிருந்தமையினால், அவர் மீண்டும் தனது வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்த்துள்ளார்.
மேலும், தாய்லாந்தின் பேங்கொக் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-402 இல் இன்று காலை 01.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்படி, முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட விமான தடை உத்தரவு காரணமாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குறித்த பயணத்திற்கு அனுமதி வழங்காததால் விமான நிலையத்தினை விட்டு அமைச்சர் வெளியேறியுள்ளார்.