
பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும் ரயிலின் மலசலகூடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாயை கைது செய்த போது சந்தேகநபரை விசாரணை செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலையே கைதுக்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி. பொலிஸ் நிலையத்தின் பிரதான பரிசோதகர் சந்தேக நபருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும், சம்பவம் தொடர்பில் அக்கறையின்றி விசாரணைகளை மேற்கொண்டதாகவும் சிறுவர் மற்றும் பெண்களை எவ்வாறு கையாள்வது என பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி செயற்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.