
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா பயணித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஜப்பானிய பிரதமரின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்க உள்ளார்.
அத்தோடு, பிராந்திய நெருக்கடிகள் மற்றும் உக்ரைன் யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு ஜப்பான் பிரதமர் தனது இந்திய விஜயத்தின் போது இந்தோ-பசிபிக் வியூகம் குறித்த விரிவுரையில் கலந்து கொள்ள உள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜப்பானிய பிரதமர் இந்தியாவில் தங்கியிருக்கும் போது இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான புதிய திட்டத்தை அறிவிப்பார் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் இந்த விஜயம், ஜி7 குழுவின் தலைவராக ஜப்பான் மற்றும் ஜி20 குழுவில் இந்தியா தலைமை வகிக்கும் பின்னணியில் நடைபெறுகின்றது.