
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஹிக்கடுவ திரணகம பிரதேசத்தில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், ஹிக்கடுவ, நாலகஸ்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான களுமுனி ரவிந்து சங்கட சில்வா எனப்படும் “புரு மூனா” பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரட்டை கொலைக்கு 20 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் கொடுத்ததாக “புரு மூனா” போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 02 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.