
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 18 நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு சிறப்பு வொஸ்ட்ரோ கணக்குகளை (எஸ்விஆர்ஏ) திறக்க அனுமதித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஃபிஜி, போட்ஸ்வானா, கயானா, ஜெர்மனி, கென்யா, இஸ்ரேல், மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளில் குறித்த அனுமதியைப் பெற்றுள்ளதாக்க தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் பகவத் காரட், இந்த 18 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர் (AD) வங்கிகளை முறையான செயல்முறைக்குப் பிறகு அத்தகைய கணக்கைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போருக்குப் பிறகு ஏற்பட்ட பொருட்களின் நெருக்கடியின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் போரில் ஈடுபடும் நாடுகள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக பல நாடுகள் உள்ளூர் நாணயத்தை வர்த்தகத்திற்கு பயன்படுத்த முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.