
ஹலவத்தை – கொழும்பு பிரதான வீதியில் மாரவில நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் ஒரு குடியிருப்பில் வசிக்கும் இளைஞன் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்தோடு குறித்த இளைஞன் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஆலோசகராகப் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.