
நீதிமன்றத்தை அவமதித்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதிவாதி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததோடு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, பிரதிவாதி இராஜாங்க அமைச்சரின் வாக்குமூலத்தைக் கொண்டதாகக் கூறப்படும் காணொளி நாடா தொடர்பான அரசாங்க பரிசோதகர் அறிக்கை நீதிமன்றத்திற்குக் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள், மனு மீதான விசாரணைக்கான திகதியை நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஏத்திவரும் ஜூன் 27 ஆம் திகதி புகார்களை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கத்தின் சட்டத்தரணிகளான விஜித குமார மற்றும் பிரியலால் சிறிசேன ஆகியோரால் இந்த 3 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்திருப்பது குறிப்பிடதக்கவிடையமாகும்.
மேலும், கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, செயற்பாட்டாளர்களுக்கு நீதவான்கள் பிணை வழங்கியமை தொடர்பில் சனத் நிஷாந்த தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.