
தைவான் அதிபர் சாய் இன்-வென் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கினார்.
மேலும்,சீனாவின் கடும் எதிர்ப்பிற்க்கு மத்தியில் தைவான் ஜனாதிபதி தனது அமெரிக்காவிற்க்கு விஜயத்தை ஆரம்பிக்கும் வகையில் நியூயோர்கிற்க்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அமெரிக்கா மற்றும் தைவானின் இந்த நடவடிக்கை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சீனா எச்சரித்துள்ளது.
அத்தோடு, தைவான் அதிபர் சாய் இன்-வென் தனது அமெரிக்கா பயணத்தின் போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திக்க கூடாது என சீனா கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தைவான் ஜனாதிபதி தனது அமெரிக்கா விஜயத்தின் போது அந்நாட்டு சபாநாயகரை சந்திக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.