
ஊழல் ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வருவதுடன், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை இணையத்தளத்தில் முன்வைத்து, ஆர்வமுள்ள தரப்பினருக்கு அந்த தகவல்களை பெற்றுக்கொடுக்கும் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் வருமானம், திட்டங்கள் மற்றும் வரி செலுத்துதல் மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும் என்பதால், ஊழல் தடுப்புச் சட்டத்தை கொண்டு வருவது சாதகமான நடவடிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியம் அரசாங்கம் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்பதை ர்வதேச நாணய நிதியத்தியமும் ஏற்றுக் கொள்வதால் அரசாங்கம் ஊடாக ஊழல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது .
இதன்படி, இலங்கைக்கு வழங்கப்படும் பணம் சரியான தேவைகளுக்கு பயன்படுத்தப்படுமா என்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நம்பிக்கை இல்லை என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழலுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவதுடன், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளை தொடருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக சமகி ஜனபலவேக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஊழலுக்கு எதிரான வலுவான சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.