
திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக பிறந்த குழந்தையை உயிருடன் வீட்டுக்குப் பின்னால் புதைத்து கொன்ற மூன்று பிள்ளைகளின் தாயை மருதங்கேணி பொலிஸார் நேற்று (02) மாலை கைது செய்துள்ளனர்.
மேலும், மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளையடி கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய இந்த பெண் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தனது வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதோடு, குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று குழி தோண்டி புதைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன், பின்னர் நேற்று (02) பிற்பகல் நாய் ஒன்று சிசு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி சிசுவின் சடலத்தை இழுத்துச் செல்லும் போது அருகில் இருந்த வீட்டினொருவர் இதனைக் கண்டு முயல் குட்டியினை நாய்க்குட்டி பிடித்து வைத்திருப்பதாக நினைத்து நாயை கல்லால் தாக்கியுள்ளது விரட்டியதற்கு பின் குழந்தையை விட்டு குறித்த நாய் ஓடியதாகவும், நாயை துரத்திய பெண் நாய் விட்டுச் சென்ற முயலைப் பார்க்க வந்ததாகவும், அது குழந்தையாக இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி அக்குழந்தையின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்து புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், அதனையடுத்து சந்தேகநபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அதனை ஒப்புக்கொண்ட அவர் கர்ப்பத்தை மறைத்து வைத்து குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ளதோடு, குழந்தையை மணல் மண்ணில் புதைத்ததாகவும், அது ஆழமில்லாததால் நாய் இழுத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது மூன்றாவது குழந்தைஇணையே இவ்வாறு சேய்துள்ளதாகவும்.மூத்த பிள்ளை பாடசாலையில் 10ஆம் வருடத்திலும் இரண்டாவது பிள்ளை 05ஆம் வருடத்திலும் கல்வி கற்று வருவதாகவும் மேலும், கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.