
தும்பரை சிறைச்சாலையில் கைதி ஒருவரிடமிருந்து இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த பெண்மணி தனது இடுப்பில் இரத்தினக்கல்லை மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது..
மேலும், அவர் ரிமாண்ட் கைதி. குறித்த கைதியை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்குமாறு சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டு உரிய மதிப்பீட்டின் பின்னர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மூன்று சிகரெட்டுகளை தனது கடமை தொப்பியில் மறைத்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த சிறைச்சாலை சார்ஜன்ட் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறைச்சாலைக்கு முன்பாக கடமையாற்றிய சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் அதிகாரியிடமிருந்து கைவிலங்கு சாவியும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்ட விசாரணைக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியில் இருந்து நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.