
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 38,000 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், கையொப்பம் தொடர்பான பிரச்சனைகள், தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை தேவைக்கேற்ப பூர்த்தி செய்யாதது மற்றும் உரிய சான்றிதழ் வழங்கப்படாதது போன்ற காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, சுமார் 6,70,000 அரச அதிகாரிகள் இந்த ஆண்டுக்கான தேர்தலுக்கான தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஒவ்வொரு தேர்தலிலும் விண்ணப்பித்த மொத்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 5 வீதமானவை நிராகரிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகத்திற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதோடு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தேர்தல் அறிவித்தல் விநியோகம் மார்ச் 3ஆம் திகதிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.