
ரயில் சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழில் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், ரயில் திணைக்கள அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழில் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த தொழில் நடவடிக்கை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 23 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், இன்று காலை புகையிரத அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் தொழில் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று பிற்பகல் வரை ரயில்கள் வழமையாக இயங்கும் என ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.