
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ZOOM ஊடாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சீல் வைத்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இது தனக்கு பொலிஸார் செய்த உதவியாகும் என தெரிவித்துள்ளார்.
தாம் இல்லாத வேளையில் எவரும் சட்டவிரோதமான பொருட்களை அலுவலகத்தில் விட்டுச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், பொலிஸாரால் தனது அலுவலகத்திற்கு சீல் வைப்பதன் மூலம் எவராலும் அதனைச் செய்ய முடியாது என்பதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் இல்லாத நிலையில் அலுவலகத்திற்கு சீல் வைத்த பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த ஜனக ரத்நாயக்க, அலுவலகத்தில் உள்ள மேசை கதிரையும் தனக்கே உரியது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.