
இலங்கையின் மிகப்பெரிய இருதரப்புக் கடனாளியான சீனாவின் கடன் மறுசீரமைப்பு உதவிக்கான முறையான உத்தரவாதம் இன்றியும் இலங்கைக்கான கடன்களை அனுமதிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உத்தியோகபூர்வ நிலுவைகளுக்கு கடன் வழங்குவது அரிதாகவே பயன்படுத்தப்படும் கொள்கையின் கீழ் சீனாவின் கடன் உத்தரவாதம் இன்றியும் இலங்கைக்கான கடன்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கடுமையான நிதித் தேவையிலுள்ள ஒரு நாட்டிற்கு கடன் வழங்குபவர் உதவியைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த ஏற்பாடு, கடனுக்கான விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி, கடந்த வியாழன் அன்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ், ஜி-20 நாடுகளும் பிற நாடுகளும் நீண்ட கடன் நீட்டிப்புகளை ஏழை நாடுகளின் கடன் சுமையை குறைக்க பரிசீலிக்கப்படும் விருப்பங்களில் சேர்க்க வேண்டும் என்று கூறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், IMF, World Bank மற்றும் Group of 20 India ஆகியவை அடுத்த வாரம் பெங்களூரில் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு முன்னதாக உலகளாவிய இறையாண்மைக் கடன் குறித்து தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களுடைய வெளிநாட்டு நாணய கையிருப்பினை இழப்பத்தினால் IMF கடன்களை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்க்காய் நம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு பரிஸ் கிளப் மற்றும் இந்தியா முறையான ஆதரவை வழங்கியுள்ள நிலையில், சீனா மட்டும் உத்தியோகபூர்வ உறுதிமொழியை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.