
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியதை எதிர்த்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மேலும், இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த மனுவை பேண வேண்டிய அவசியமில்லை எனவும், அதனை வாபஸ் பெற அனுமதிக்குமாறும் பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், தம்மை சட்டவிரோதமான முறையில் கட்டாய விடுமுறையில் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், அந்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் கோரி பூஜித் ஜயசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்க விடையமாகும்.