
சிறந்த உலகை உருவாக்க இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியையும் அவர் பார்வையிட்டதோடு ஆஸ்திரேலியா பிரதமர் டுவிட்டரில் கூறியதாவது: கிரிக்கெட் களத்தில் உலகின் தலைசிறந்த வீரர்களாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் போட்டியிடுகின்றன என பதிவிட்டுள்ளார்.
மேலும், சிறந்த உலகை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில், நல்ல நண்பருடன் கிரிக்கெட் போட்டியைக் காணும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.