
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு நிதி கிடைக்காததே காரணத்தினால் இன்னும் அச்சடிக்கும் பணிக்கும் ஆரம்பிக்கப்படவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளதோடு இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க அரச அச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் எனவும் தபால் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எயாரும் அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பணம் வழங்கப்படுமாயின், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் 03 நாட்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக, அரச அச்சக ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.