
3 பயிர்ச் செய்கைகளின் பின்னர் முதன் முறையாக இந்நாட்டு விவசாயிகளுக்கு நெற்செய்கைக்குத் தேவையான மண் உரம் அல்லது TSP உரம் ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மேலும், 36,000 மெற்றிக் தொன் உரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு இதன் மூலம் 01 ஹெக்டேருக்கு 55 கிலோ மண் உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அத்தோடு, உர இருப்பு உத்தியோகபூர்வ விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு விநியோகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01 மணிக்கு வத்தளை வர்த்தக உர நிறுவன வளாகத்தில் நடைபெரவுள்ளதோடு எதிர்காலத்தில் இதேபோன்ற மற்றொரு உரக்கப்பல் வரவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.