45 மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளில் மாற்றம் செய்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, பல்ஸ் ஆக்சிமீட்டர் ஒன்றின் புதிய விலை ரூ. 5,418 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்த குளுக்கோஸ் மீட்டரின் விலை ரூபா 6,200 ஆகவும், இரத்த குளுக்கோஸ் மீட்டரைப் பயன்படுத்தும் பரிசோதனை துண்டு ஒன்றின் விலை 112.21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.