
மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் கைத்தொழில் துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்,மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் சந்தையை இலக்காகக் கொண்ட உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், மின்சார கட்டணங்களுக்கான மானியங்களை வழங்குவது நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான சூழ்நிலையல்ல என கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
விகாரைகளின் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பிலும் ஆச்சாரிய பிரியங்க துனுசிங்க கருத்து வெளியிட்டார். தற்போதுள்ள நிலைமைகளை அறிந்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது விரும்பத்தக்கது என மேலும் சுட்டிக்காட்டினார்.