
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களின் பட்டியல் அடங்கிய QR குறியீடு இன்று முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.elections.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உரிய தகவல்களைப் பெற முடியும் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.