
எதிர்வரும் பருவத்திற்கு தட்டுப்பாடு இன்றி உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பருவத்திற்க்குத் தேவையான உர கொள்வனவிற்க்கு அதிக முன்னுரிமை கொடுப்பதன் காரணமாக சுமார் 24 இலட்சம் மெற்றிக் தொன் உரத்தினை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் பருவத்தில் உரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் பூந்தி உரமும் மானிய விலையில் வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, 50 கிலோ பூந்தி உர மூட்டையின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பது தொடர்பான அமைச்சுப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.