
இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம்.பௌசியை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவரை விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி, 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது வெளிநாட்டில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட வாகனத்தை தனது சொந்த பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமாய் குறிப்பிடத்தக்க விடையமாகும்.