
கொழும்பு புரஹால பிரதேசத்தில் இன்று தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதன் காரணமாக இதுவரை 28 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர்எமக்கு தெரிவித்தார்.
மேலும். ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு புரஹல பகுதியிலிருந்து இப்பன்வல சந்தி ஊடாக பேரணியாக கொழும்பு கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டதையடுத்து பொலிஸார் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளவேளை போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்த நிலையில் பொலிஸாரின் எதிர்ப்பையும் மீறி இப்பன்வல சந்தி ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி செல்ல முற்பட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் தாக்கியுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருந்தன. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே இது இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மற்றும் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.