
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் ஒயில் கம்பனி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் திருகோணமலை பகுதியில் உள்ள 61 சேமிப்பு தாங்கிகளை புனரமைப்பு செய்யும் திருகோணமலை அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், திருகோணமலை எல்ஐஓசி தாங்கி வளாகத்தின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று (03) இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.