
வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், குறித்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற 56 வயதுடைய நபர் எனவும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.