
கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை காவலரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேலும், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த கைதி உடைந்த சுவரின் தகரத்தால் மூடப்பட்ட பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதன்படி, கேகாலை சிறைச்சாலையின் வெளிப்புற ஆயுதப் பிரிவில் கடமையாற்றிய சிறைக்காவலர் ஒருவரே சுட்டுள்ளதாகவும் காயமடைந்த கைதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மெல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய கைதியே உயிரிழந்துள்ளதாகவும் பராமரிப்பு வழக்குக்காக 09 மாதங்கள் சிறையில் தண்டனை விதிக்கப்பட்டு 14 நாட்கள் சிறைவாசத்தை கழித்த அவர் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக சிறைச்சாலைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.