லங்கா சதொச ஊடாக 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 180 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொன்னி சம்பா அரிசி கிரோ ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை194 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட உருனைக்கிழங்கின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 280 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.