
நூருல் ஹுதா உமர்
நாட்டின் தற்போதைய பெருளாதாரத்தின் வீழ்ச்சியினால் மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயங்கள் கஸ்டத்திற்குள்ளாகி இருக்கின்ற நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நிலையில் அதன் ஒரு பகுதியாகவும் கல்முனை இருதயநாதர் ஆலயத்திற்க்கு முன்னால் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய போராட்டம் மின்சார தடை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.
பொலிஸாரினுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்ற இப்போராட்டமானது கல்முனை இருதயநாதர் ஆலய பங்குத்தந்தையான அருளானந்தன் தேவதாஸன் தலைமையில் இடம்பெற்றதுடன் நூற்றுக்கும் அதிகமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிர்ப்பான கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டகாரர்கள் விலைவாசியை சீராக்குங்கள், அரசியலை மீளாய்வு செய்யுங்கள் மற்றும் இறை நேசத்தை பெறுங்கள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் மற்றும் நிர்வாகத்தை சரியாக செய்யுங்கள், விலை வாசியை குறையுங்கள் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் என அரசுக்கு எதிரான பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.