லங்கா ஐஓசி நிறுவனத்தின் அனைத்து எரிபொருள் போக்குவரத்து வாகனங்களும் பணிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
IOC நிறுவனம் 160 டேங்கர்களை கொண்டுள்ளதாகவும், தற்போது நாளாந்தம் 75 முதல் 100 டேங்கர்கள் வரை இயங்குவதாகவும் சிலோன் இந்தியன் ஆயில், தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று எரிபொருள் போக்குவரத்து வாகனங்கள் செல்ல வில்லை என பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.