வெல்லவாய நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் தொகை சுமார் முப்பது கிராம் இருநூற்று அறுபது மில்லிகிராம் என பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக வெல்லவாய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய அளவிலான ஹெரோயின் தொகை இதுவாகும். கைது செய்யப்பட்ட பெண்ணும் ஏனைய மூவரும் எல்ல மற்றும் பண்டாரவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருபத்தி நான்கு, இருபத்தி ஆறு, முப்பத்தொன்று மற்றும் முப்பத்தி நான்கு வயதுடையவர்களாவர்.
Greetings! Very helpful advice within this post! Its the little changes that make the greatest changes. Thanks a lot for sharing!