வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட .டி.வி.சானக்க அவர்கள் மின்சார அமைச்சின் பணிகளை பொறுப்பேற்றுள்ளார்.
இதன் பின்னணியில் தான் இந்திக அனுருத்த மின்சார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மின்சார அமைச்சு கஸ்ருத்து தெரிவிக்கையில் “எங்களிடம் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் உள்ளனர்” என அதன் செயலாளர் தெரிவித்தார்.
இந்த வகையில், மின்சார அமைச்சுக்கு 02 இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டதா இல்லையா என ஜனாதிபதி ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டு வினவியதுடன், 02 இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டதாக உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, மின்சார இராஜாங்க அமைச்சராக இந்திக்க அனுருத்த, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட டி.வி.சானக்க, மின்சார அமைச்சை பொறுப்பேற்றதற்கான காரணத்தை உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.