
உணவு உற்பத்தி மற்றும் அபிவிருத்திக்காக சகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களையும் அடுத்த வாரத்திற்குள் கூட்டுமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் .தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.