
சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்திற்கு உள்ளான இரு நாய்களை கார் மீது மோதிவிட்டு ஓடிய சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை மதுரா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேக நபரான பெண் வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இரண்டு நாய்களையும் விபத்துக்குள்ளாகி காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற காட்சிகள் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பல விலங்கு அமைப்புகளும் பொதுமக்களிடம் உதவி கேட்டிருந்தன.