
மருதானை ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் இருந்து தீயணைப்பு படைத் தலைமையகம் நோக்கி சுதுவெல்ல சந்தி வரையிலான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (09) காலை முதல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையின் திருத்தப் பணிகள் முடியும் வரை மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.