
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கொழும்பு மேல் நீதிமன்றில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்பாக வாசிக்கப்படவுள்ளது.
இதன்போது, நௌபர் மௌலவி உட்பட பிரதிவாதிகள் 25 பேரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.