
எனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் கோரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அவ்வாறு செய்யமாட்டார் என நம்புவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று அலரிமாளிகையில் மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து, உள்ளூராட்சி நிறுவனங்களின் மேயர்கள் மற்றும் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக இந்த சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது.
பெரும்பான்மை மக்கள் ஆணையுடன் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கே பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழுவினர், மக்களின் கோரிக்கைகளை ஏற்று பதவியை தக்கவைத்துக்கொண்டு அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
பிரதமரின் பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு, பிரதமரின் பெயரைப் பாதுகாப்பது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.