
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்ட பேரணியில் வந்த மாணவர்கள் பொலிஸாரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.