பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை கைது செய்து தடுத்து வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ரவிஹர பின்னதுவ ஊடாக இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பயங்கரவாதத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர், பேலியகொட பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவை முன்வைத்த சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் கடந்த 18ஆம் திகதி எவ்வித நியாயமான காரணமும் இன்றி பிரதிவாதிகளால் கைது செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கைது சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி, தற்போது தங்காலை பிரதேசத்தில் உள்ள தடுப்பு முகாமில் தமது கட்சிக்காறினை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகவும், சட்டத்தரணிகள் தனது கட்சிக்காரருடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுதாரரின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரிடம் இருந்து ஆலோசனை பெறுவது கூட கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது கட்சிக்காரரை இதுவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கட்சிக்காரரைக் கைது செய்தல், தடுப்புக் காவலில் வைத்தல், போன்றவற்றுக்கு நியாயமான சட்ட அடிப்படைகள் இல்லை என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
மேலும் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதன் மூலம் தமது கட்ட்சிக்காரரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
.
இதன்படி, தடுப்புக்காவலில் உள்ள தனது கட்சிக்காரரை சந்திக்க அவரது சட்டத்தரணிகளை அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்குமாறும், சந்தேக நபரை உடனடியாக அருகில் உள்ள நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறும் மனுதாரரின் சட்டத்தரணி பிரதிவாதிகளிடம் கோரியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கட்சிக்காரரை உடனடியாக சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும்,
மேலும், கட்சிக்காரர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வரவழைக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், தனது கட்சிக்காரரை காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவு செல்லாது என்றும், அவரை காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
Greetings! Very helpful advice within this post! Its the little changes that make the greatest changes. Thanks a lot for sharing!