
HOPE GATE எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கௌரவமான வரவேற்பளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட விசேட நுழைவு வாயில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரால் (01) இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பணியாளர்களுக்கும், வெளிநாடுகளில் பணிபுரிந்து இலங்கை திரும்பும் தொழிலாளர்களுக்கும் இந்தப் புதிய நுழைவு வாயில் திறக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது,
ஹோப் கேட் (HOPE GATE) மூலம், மாகாணத்தினைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பு ஓய்வு இடமும் ஏற்படுத்தப்பட உள்ளது.
பணபலம் அல்லது அதிகாரம் உள்ளவர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் விஐபி வசதி வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.