இன்று முதல் எரிபொருள் விலையை குறைக்க சிபெட்கோ முடிவு செய்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதன் புதிய விலை 450 ரூபாய்.
ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, இதனால் அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.
இது தவிர சிலோன் டீசல் லீற்றாரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி, இதன் புதிய விலை 440 ரூபாய்.
லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ரக எரிபொருள் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை ரூ.510.