சிலோன் ஐஓசியும் இன்று (17) இரவு எரிபொருள் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி லங்கா ஐஓசியின் எரிபொருள் விலை இன்று இரவு 10 மணி முதல் குறைக்கப்படவுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 450 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, இதனால் அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.
இது தவிர ஆட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி, இதன் புதிய விலை 440 ரூபாய்.
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் எரிபொருளின் விலை ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை ரூ.510.