
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாடாளுமன்றத்தில் இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயன்றதாகக் கூறப்படும் கேமராவில் சிக்கியுள்ளார்.
சென்ற வெள்ளிக்கிழமைஎன்று (20) பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த அவர்கள் சிறையிலிருந்து பாராளுமன்ற அமர்வுகளுக்குச் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையின் போது வீடுகளுக்கு தீ வைப்பது தொடர்பான கடும் வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை அச்சுறுத்தும் விதத்தில் எம்.பி நிஷாந்த அணுக முயற்சிப்பது கமெராவில் சிக்கியது.
இவ்வாறு முயற்சித்தவரை பாராளுமன்ற பாதுகாப்பினார்களால் தடுக்கப்பட்டு மீண்டும் ஆளும் கட்சியினருடைய பக்க இருக்கையில் அமர்த்தும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளது.
இவ வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவருகின்றது.