யூரியா உர விநியோகம் நாளை (12) முதல் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து உரங்களை இறக்கும் பணிகள் 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 10 நாட்களுக்குள் உரம் இறக்கும் பணி முடிக்கப்பட உள்ளது.
லங்கா கொமர்ஷல் உர நிறுவனம் நாடளாவிய ரீதியில் உர இருப்புக்களை விநியோகிக்கும் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.